2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பட்டதாரிகளுக்கான ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டது

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் செவ்வாய்க்கிழமை (6)  இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் பட்டதாரிகளை உள்வாங்கும் பொருட்டு 30.03.2012 ற்கு முன் பட்டம் பெற்றவர்களின் ஆவண பரிசீலனை செவ்வாய்க்கிழமை (06) இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமையவே குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் மேலும் தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X