2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வறட்சியின் பாதிப்பு குறித்து செயலமர்வு

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 'வறட்சியான சிறுபோகம் 2014 வெற்றி கரமான பயிர்ச் செய்கைக்கான விவசாய தொழில்நுட்;ப முறைகள்' எனும் தொனிப்பொருளில் செயலமர்வு செவ்வாய்க்கிழமை(6) வண்ணாமோட்டை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் பா.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் வடமாகாண விவசாய கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விவசாயம் தொடர்பிலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் விவசாய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் எவ்வாறு இப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது என்பது தொடர்பிலும் நவீன தொழில்நுட்ப முறைகளை எவ்வாறு விவசாயிகள் கையாழ்வது அதன் மூலம் விவசாயிகள் உச்சப்பயணை அடைவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் உட்;பட நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது நவீன விவசாய முறைகளை விவசாய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X