2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முதிரைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிராட்டிக்குளம் காட்டுப்  பகுதியிலிருந்து முதிரைமரக் குற்றிகளை கன்டர் ரக வாகனத்தில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை புதன்கிழமை (07) கைதுசெய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த வாகனத்துடன்; 07 அடி நீளமும் 2 ½ அடி விட்டமும் கொண்ட 09 முதிரைமரக் குற்றிகளை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.

சிராட்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு நாட்டாங்குளம் பிரதான வீதிக்கு வந்தபோது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X