2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருட்டுடன் தொடர்புடைய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 08 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில்  அண்மைக்காலமாக இடம்பெற்ற   திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 04 பேரை புதன்கிழமை (07) கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

சாம்பல்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடினார்கள்; என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா மற்றும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தினியார், மகிழங்குளத்தில் உள்ள வீடொன்றில் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் மகாறம்பைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  

மேலும், வவுனியா நீதிமன்ற வளாகத்தில் கையடக்கத் தொலைபேசியை கொண்டுசெல்ல முடியாமையால், கையடக்க தொலைபேசியை தனது முச்சக்கரவண்டியில் வைத்துவிட்டுச் சென்ற நிலையில் அதைத் திருடிய ஒருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர்கள்  14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X