2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விவசாயச் சேவையில் வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளது

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை விவசாயச் சேவைக்கு தமிழ்மொழி மூலமானவர்கள் உள்வாங்கப்படாமையால்,  பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ்மொழி மூல விவசாயச் சேவைக்கு தகுதியுடையோர் அலுவலர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது,

'இலங்கை விவசாயச் சேவையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் 52 தொடக்கம் 70 வெற்றிடங்கள் உள்ளன.  எனினும், போட்டிப் பரீட்சைக்கு பல தடவைகள் தோற்றியவர்கள் கூட இதுவரையில் உள்வாங்கப்படாததுடன்,  நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றும் அவர்கள் தெரிவுசெய்யப்படாத நிலைமை உள்ளது.

ஆராய்ச்சி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர், விவசாய விரிவுரையாளர், விவசாய பொருளியலாளர் ஆகிய வெற்றிடங்கள் உள்ளன. தற்போது இந்த வெற்றிடங்களை ஏனைய பதவியில் உள்ள உத்தியோகத்தர்கள்  கடுமையாக செயற்படுத்தி வருகின்றனர். எனினும், அவர்களுக்கு பதில் கடமைக்கான வேதனங்கள் வழங்கப்படாத நிலையில், பெரும் வேலைச்சுமை காணப்படுகின்றது.

இதேவேளை, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் 300 இற்கும்  மேற்பட்டோர் பரீட்சைக்கு தோற்றியுள்ளபோதிலும், 11 பேர் மாத்திரம் இச்சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  வவுனியா மற்றும் குண்டகசாலை விவசாயக் கல்லூரிகளுக்கு 14 தமிழ் விரிவுரையாளர்கள் தேவையாக உள்ளனர். ஆனால், 05 விரிவுரையாளர்களே உள்ளனா. இதனால்,  போதுமான விரிவுரையாளர்கள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக இங்கு கற்கும் தமிழ் மாணவர்கள்; தெரிவித்த்துள்ளனர்.

மேலும்,   ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் மற்றும்  விவசாய உத்தியோகத்தர்கள் இன்மையால் வடக்கு, கிழக்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக மத்திய மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர், பொது நிர்வாக அமைச்சு உட்பட விவசாய திணைக்கள் அதிகரிகளுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X