2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குஞ்சுக்குளம் பிரதேசத்தில் புதிய பாலம்

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்துஓயாவுக்கு மேலாக  புதிய  பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.

இதற்காக சுமார் 27 மில்லியன் ரூபாவை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மாதா கிராமம், பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக்  கிராமங்களுக்கான  போக்குவரத்தை  மேம்படுத்தும் முகமாக பாலம் அமைக்கப்படவுள்ளது. 

மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மேற்படி கிராமங்களுக்கான தரைவழிப் பாதை ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்படுவது வழமையாகும்.   இந்த நிலையில், மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின்  முயற்சியில் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது.  பால நிர்மாணப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X