2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிலைத் தோட்டத்தில் யானை அட்டகாசம்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட வட்டக்கண்டல் கிராமத்தினுள்; புகுந்த காட்டு யானையொன்று, அங்குள்ள  வெற்றிலைத் தோட்டத்தை  சேதப்படுத்தியுள்ளது.

இதனால்,  பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  வெற்றிலைத் தோட்ட உரிமையாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சேதமாக்கப்பட்ட வெற்றிலைத் தோட்டத்தை  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சனிக்கிழமை (10) சென்று பார்வையிட்டார்.

வெற்றிலைத் தோட்டத்தினுள் வெள்ளிக்கிழமை (09) யானை புகுந்ததைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருடன் இராணுவத்தினர், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த இடத்திற்கு வந்தனர். குறித்த தோட்டத்தினுள் புகுந்த  யானையை வெளியேற்ற நீண்டநேரம் அதிகாரிகள் போராடினர். எனினும்,  யானை தோட்டத்தை விட்டு வெளியில் வரவில்லை.

இதன் பின்னர்,  பட்டாசுகள் கொழுத்தியே  தோட்டத்தை விட்டு யானை வெளியேற்றியதாகவும் தோட்ட உரிமையாளர் கூறினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X