2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊற்று பெருக்கெடுக்கும் கிணறு

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை ஸ்ரீ கண்ணகி அம்மன் கோவிலில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து ஊற்று பெருக்கெடுத்து வருவதுடன், இதனை மக்கள் தொடர்ந்தும் பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமையிலிருந்து (08) இந்த அபூர்வ சம்பவம் இடம்பெற்று வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த குறித்த கிணறு சுமார் 25 அடிக்கும் கூடுதலான ஆழத்தைக் கொண்டது எனவும், குறித்த கிணற்றிலிருந்து தற்போதும் நீர் உயர்வடைந்து வருவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலை காணப்படுகிறது. இடைக்கிடையே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிணற்றில் நீர் ஊற்றெடுப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு எனக் குறிப்பிடும் இந்து மதகுரு ஒருவர், இதை அதிசய நிகழ்வொன்றாகவே கருதவேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை வற்றாப்பளை ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயிலில் கடந்த வருடம் இதே மாதம் வேப்பமரத்திலிருந்து தொடர்ச்சியாக பால் வடிந்த அபூர்வ சம்பவமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X