2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது பொலிஸ் முறைப்பாடு

Super User   / 2014 மே 11 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரில் இயங்கும் சில நிதி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மீது பொதுமக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

மன்னார் நகரில் பல நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. குறித்த நிதி நிறுவனங்களில் மன்னாரைச் சேர்ந்த பலரும் பெரும் எண்ணிக்கையான பெண்கள் கடன்களை பெற்றுள்ளனர்.

இவ்விதம் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெற்றவர்களிடமிருந்து பணத்தினை அறவிடுவதற்கு அவர்களின் வீடுகளுக்குச் செல்லும் சில ஆண் ஊழியர்கள் கடன் பெற்ற குறித்த பெண்களை தகாத வார்த்தைகளினால் ஏசுவதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதாகவும், இரவு 9 மணி கடந்த நிலையில் குறித்த வீடுகளுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் நிந்திப்பதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடன் பெற்ற பெண்களை குறித்த கடன் அறவிடும் சில பணியாளர்கள் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பாதீக்கப்பட்ட சில பெண்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மன்னார் பொலிஸார் இது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X