2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிமிர்ந்து நிற்கும் தமிழனை பயங்கரவாதியாக்குகின்றனர்: ரவிகரன்

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'நிமிர்ந்து நிற்கும் தமிழனை பயங்கரவாதியாக்குகின்றனர்' என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவினர் து.ரவிகரனிடம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டமையையடுத்து அது தொடர்பில் தொடர்பு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'நிமிர்ந்து நிற்கும் தமிழனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்துவதையே இந்த விசாரணை காட்டுகிறது. தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட என் மீது நடைபெறும் விசாரணைகள் இலங்கையில் ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

நேற்று (12.5) மாலை 3.30 மணியளவில் வருகை தந்த நால்வரால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அவ்வாறு வந்தவர்களிடம் உங்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது ஒருவர் ரி.ஐ.டி எனக்குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையையும் மற்றையவர் இலங்கை பொலிஸ் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் காண்பித்தனர்.

இவ்விசாரணை இப்பொழுது இடம்பெறுவதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது நாம் கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து வருகிறோம். கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே நடைபெறுகிறது என்று கூறி என்னைப்பற்றியும் எனது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் விபரங்களை கேட்டு பதிவு செய்து கொண்டனர்.

மேலும் சில கேள்விகளை கேட்டுவிட்டு அவசியம் ஏற்படின் மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிச்சென்றார்கள்.

நாம் இன்று மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு களத்தில் நிற்கும் மக்களின் பிரதிநிதிகள். மக்களின் இன்னல்களையும் இடர்களையும் அகற்ற முனைய வேண்டியது எமது கடமை. தென்னிலங்கை இனச்சுத்திகரிப்பு அரசியலுக்கு முரணாக நாம் குரல் கொடுப்பதற்கு எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் எம் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தொடர்ந்தும் போராடுவோம்' என அவர் மேலும்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X