2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 மே 13 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் இன்று செவ்வாய்க்கிழமை(13) உத்தரவிட்டார்.

குறித்த நபர் வைத்த கட்டுத்துவக்கு வெடியில் டபிள்யு.ஜி.எஸ்.தர்ஷன(25) என்ற இராணுவ வீரர் ஞாயிற்றுக்கிழமை(11) இரவு காயமடைந்து, கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த குறித்த நபர் நேற்று(12) மாலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இன்று(13) சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X