2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யன்னல்களை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து முதிரை மரத்தினால் செய்யப்பட்ட யன்னல்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மா.கணேஷராஜா நேற்று(12) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் முள்ளியவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து முதிரை மரத்தினால் செய்யப்பட்ட யன்னல்களை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் திருடிச் சென்றுள்ளதுடன் அதனை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் நேற்று முன்தினம(11) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதுடன், அவ்விருவரையும் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே 14 நாள் விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X