2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மழையால் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காற்றுடன் பெய்த கடும் மழையால் பாதிப்புக்களை எதிர்கொண்ட கன்னாட்டி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் புதன்கிழமை  மாலை (14)  வழங்கப்பட்டன.

இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியிருந்து தற்சமயம் வீடுகளுக்கு திரும்பியுள்ள இம்மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் இல்லாமை தொடர்பில் வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்புக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவை வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்ட இக்கற்றல் உபகரணங்களை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் உறுப்பினர்களான எஸ்.சந்திரகுமார், மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டு வழங்கினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X