2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முதிரை மரக்குற்றிகளைக் கடத்திய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முட்கொம்பன் காட்டுப் பகுதியிலிருந்து 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 21 முதிரைமரக் குற்றிகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இருவர் பூநகரி நல்லூர்ப் பகுதியில் வியாழக்கிழமை (15) கைதுசெய்யப்பட்டதாக கிளிநொச்சி வட்டார வனவள உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன் தெரிவித்தார்.

முதிரைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனத்தை பூநகரி, நல்லூர்ப் பகுதியில் நின்றிருந்த இராணுவத்தினர் இடைமறித்துச் சோதனையிட்டனர்.

இதன்போது, முதிரைமரக் குற்றிகள் கடத்திச் செல்கின்றமை தெரியவந்த நிலையில், கிளிநொச்சி வட்டார வனவள அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அவ்விடத்திற்குச் சென்று முதிரைமரக் குற்றிகளை கடத்தியதாகக் கூறப்படும் இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்து பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குறித்த வாகனமும் முதிரை மரக்குற்றிகளுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X