2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் குகனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிறிஸ்டி குகராஜா எனப்படும் குகனின் நினைவுதினம் வியாழக்கிழமை  (15) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் நீண்டகாலமாக டெலோ அமைப்பின் பொறுப்பாளராக இருந்த சமயம் 1999ஆம் ஆண்டு கொழும்பில்  இனந்தெரியாதோரால் இவர்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 15ஆவது வருட  நினைவுதினம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்திற்கு முன்பாக நடைபெற்றது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன்,  குகராஜாவின் தாயார் சகோதரர்கள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தின் நீண்டகால உறுப்பினர்களும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X