2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அதிகளவில் பிடிபடும் 'கரட்டை' மீன்கள்

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், தலைமன்னார் கடற்பரப்பில் தற்போது அதிகளவில் 'கரட்டை' எனப்படும் மீன்கள்; பிடிபட்டுவருகின்ற நிலையில்,  ஒரு கிலோ மீன் 10 ரூபா முதல் 20 ரூபா வரையே விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இம்மீன்களை உணவுக்காக பயன்படுத்துவது குறைந்துள்ளது. இந்நிலையில், இம்மீன்களை கருவாடாக்கும்  பணியில் அங்குள்ள 30 இற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரையோரத்திலுள்ள வாடிகளில்  மீன்களை  கொண்டுவந்து கருவடாக்கப்படுகின்றன.  இவ்வாறு ஒரு கிலோ கரட்டை மீன்களை கருவாட்டிற்கு வெட்டுவதற்கு 05 ரூபா வழங்கப்படுகின்றது. நாளொன்றுக்கு ஒவ்வொரு பெண்களும் 300 ரூபா முதல் 500 ரூபாவரை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மீன்களை வெட்டுவதாக அப்பெண்கள் தெரிவித்தனர்.

கரட்டை மீன் கருவாடுகளை உள்ளூருக்கும்  வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X