2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நினைவுதினம் ஏதோவொரு மூலையில் அனுஷ்டிக்கப்படும்: செல்வம் அடைக்கலநாதன்

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் ஏதோவொரு மூலையில் எம்மக்களால் அனுஷ்டிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்த அரசாங்கம் கடும் போக்கை காட்டுவதிலிருந்து தெரிகின்றது தமிழ் மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை உள்ளது என்பது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தாயை நினைவுகூருவதற்கு குழந்தைக்கு உரிமையில்லையென்றால், எங்களுடைய மக்களை எவ்வாறு பார்க்கின்றது என்பதும் புலப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் நாம் இங்குள்ள இராஜதந்திரிகளுக்கும் தெரிவித்துள்ளோம்.  இந்நிலையில், எங்களுடைய உள்ளங்களில் உள்ள குமுறல்களை எதிர்வரும் 18ஆம் திகதி ஏதோவொரு மூலையிலே எங்களுடைய மக்கள் நிகழ்வை நடத்துவார்கள்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X