2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் முருங்கனில் விபத்து; இளைஞன் பலி

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

முருங்கன் – சிலாபத்துறை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்து ஒன்றில் 17 வயது இளைஞர்; ஒருவர் உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-எனினும் குறித்த இளைஞரின் மரணத்திற்கு மன்னார் பொது வைத்தியசாலைத்தரப்பினரின் அசமந்தப்போக்கே காரணம் என இளைஞரின் பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் மருதமடு கிராமத்தைச் சேர்ந்த தே.சுலைக்சன் (வயது-17)  என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்தார்.

நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் தனது வீட்டில் இருந்து பரிகாரிக்கண்டல் பகுதியில் உள்ள பன்னைக்கு பால் கொடுத்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது முருங்கன் சிலாபத்துறை பிரதான வீதியால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனம் இளைஞர் மீது மோதியுள்ளது.

காயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின்னரே இளைஞனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் பெற்றோர் கூறினர். நீண்ட நேரத்தின் பின் காலை 11.30 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பிற்கு அம்பிலான்ஸ் வாகனத்தில் கொண்டு  செல்லப்பட்ட போது வழியில் இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை வாகனத்தின் சாரதியை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X