2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை

Super User   / 2014 மே 18 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.ராஜ்குமார் நிதிமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் வடமாகாண கல்வி திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் வரை துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளரான மாலினி வெலிங்டன் பதில் வலயக்கல்விப்பணிப்பாளராக  வடமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்கு பதில் வலயக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்ட துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் வாரத்தில் இரு தடவைகள் மாத்திரமே பதில் கடமையாற்றுவதற்கு வருகை தருவதாகவும், இதனால் அலுவலக நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாது, பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அந்த அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அனுமதி வழங்கப்படுகின்ற முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடும் அதிகாரம் வலயக்கல்விப்பணிப்பாளருக்கே உள்ள போதும் தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் இல்லாமையினால் தமது அலுவலக நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X