2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பனிக்கங்குளம கிராம மக்களால் மின்சாரசபை அலுவலகம் முற்றுகை

Kanagaraj   / 2014 மே 19 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வவுனியாவில் உள்ள மின்சார சபையின் வடக்கின் வசந்தம் அலுவலகத்தை கிராம மக்கள் இன்று(19) முற்றுகையிட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவின், பனிக்கங்குளம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக மின்சாரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நீண்டகாலமாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து பஸ் வண்டியில்; வந்த பனிக்கங்குளத்தைச் சேர்ந்த சுமார் 60  பேர், வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்திற்கு முன்னால் இருந்து, மின்சார சபையின் வடக்கின் வசந்தம் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து தமது மின்சார பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது கிராமத்தில் உள்ள பாடசாலையானது ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்ட 5000 பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பாடசாலையென்பதுடன், அங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மின்சார இணைப்பு இல்லாமையால் பாடசாலை நடவடிக்கைகளை பூரணமாக மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்து மகஜரொன்றினையும் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் ஜீன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து தமது கிராமத்திற்கான மின்சார இணைப்பு அடுத்த மாதம் வழங்கப்படவில்லை எனில் ஜீலை மாதம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கிராம மக்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X