2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'நிரந்தர தீர்வுக்கு பாரத பிரதமர் ஆவன செய்வார் என்ற அவா இலங்கைத் தமிழர்களிடம் உண்டு'

Suganthini Ratnam   / 2014 மே 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்கு பாரதப் பிரதமர் ஆவன செய்வார் என்ற அவா இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு திங்கட்கிழமை (19) அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறினார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழர்களின் நீண்ட, நெடிய பாதையில் பல இன்னல்களும் துன்பங்களுமே எஞ்சி உள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இலங்;கைத் தமிழர்களுக்கு தன்னம்பிக்கை அளித்துள்ளது.

யுத்தம் முடிவுற்றதாக சர்வதேசத்திடம் பறை சாற்றிக்கொண்ட இலங்கை அரசு, இன்று தனது நாட்டுக்குள்ளேயே சிறுபான்மை இனத்தவரை அடக்குமுறைக்குள் வாழச் செய்யும் வழிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதேவேளை, சிறுபான்மை இனத்தவர்களின் வணக்கஸ்தலங்களை தாக்குவதும் காணிகளை சுவீகரிப்பதும் இராணுவ பிரசன்னத்திற்குள் தமிழர் தாயகத்தை வைத்துள்ளமையும் எவ்விதத்திலும் சிறுபான்மையினருக்கு நிம்மதியான வாழ்வில்லை என்பதற்கான சான்றுகளாக உள்ளன.

இவ்வாறான காரணங்களால் இலங்கை அரசிடமிருந்து எந்தத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற தீர்க்கமான முடிவில்; சர்வதேசமே தமக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள ஒரேவழி என்று  நம்பிக்கையை  இலங்கைத் தமிழர்கள் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தனிப் பெரும்பான்மை மிக்க ஆட்சியை பாரத மண்ணில் நிறுவும் தாங்கள், தங்கள் தேசத்தின் தென் கோடியில் உள்ள தமிழக மக்களின் உறவுகளான இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வுக்காக இலங்கை அரசுக்கு கொடுக்கும் அழுத்தங்கள் மூலம் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

பாரத தேசத்தின் பிரதமராக பெரும்பான்மை மக்களின் விருப்புடன்; தாங்கள் தெரிவுசெய்யப்பட்டமைக்கு இலங்கைத் தமிழர்களின் சார்பில் வாழ்த்துகின்றேன்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X