2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தின் கொண்டமலை பகுதியில்  மணல் ஏற்றிச்சென்ற  உழவு இயந்திரமொன்றை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை  திங்கட்கிழமை (19) கைதுசெய்ததாகவும் முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொண்டமலைப் பகுதியிலுள்;ள அரசாங்க காணியொன்றிலிருந்து இச்சந்தேக நபர் சட்டவிரோதமாக  மணல் ஏற்றியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, உழவு இயந்திரத்துடன் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் நேற்றையதினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X