2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விற்கப்பட்ட சிசு மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு  விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த  அதிகாரியொருவர் தெரிவித்தார். 

அத்துடன், குறித்த தம்பதியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர்,  பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தாராபுரம் கிராமத்திற்குச் சென்று இச்சிசுவை மீட்டுள்ளனர். 

இக்குழந்தை கடந்த 04 நாட்களுக்கு முன்னர்  15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், இச்சிசுவின் தாய் வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவரென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X