2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபை உறுப்பினர் நீதிமன்றில் ஆஜர்

Kanagaraj   / 2014 மே 20 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணம் கபில்நாத்

வடமாகாண சபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று(20) செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை (19)விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரமே அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர், நீதிமன்றில் ஆஜரானபோது மன்றில் பிரசன்னமான பொலிஸார், குறித்த உறுப்பினர், காணாமற்போனோர் தொடர்பான போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்தார். அதுதொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்தே நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தாக மன்றின் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விளக்கத்திற்கு செவிமடுத்த நீதவான் மா.கணேசராஜா, போராட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுக்க முடியும், இருப்பினும் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தை நடத்தமுடியாது என தெரிவித்ததுடன்  மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனையும் விடுவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X