2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

போராட்டம் நடத்த நான் தீர்மானிக்கவில்லை

Kanagaraj   / 2014 மே 20 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனோர் தொடர்பில் போராட்டம் மேற்கொள்ளும் எண்ணம் எனக்கு இருந்தது என்றும் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்துவதாக தீர்மானிக்கவில்லையென்றும் என்றும் வடமாகாண சபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நீதிமன்றம் விடுத்திருந்த அழைப்பாணை தொடர்பிலும் , போராட்டம் நடத்த முற்பட்டீர்களா என்றும் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போராட்டம் மேற்கொள்ளும் எண்ணம் எனக்கு இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்தேன். இருந்தும் அப்போராட்டத்தை 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தவிருந்ததாகவும் அதுவும்  நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்திருந்ததாகவும் பொலிஸார் கூறுவது பொய்யான விடயமாகும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X