2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆக்கத்திறன் விருத்தி செயற்பாடு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவிலுள்ள  பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற சிறுவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் விருத்திச்  செயற்பாடுகள் புதன்கிழமை (21) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வோதய நிலையத்தின் செயற்பாட்டின் கீழ், கற்றல் இடர்பாடுகளை எதிர்நோக்கும் சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருப்பனிச்சான்குளம், அக்போபுர பகுதிகளைச் சேர்ந்த சுமார் 75 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வவுனியா மகாறம்பைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கற்றல் செயற்பாட்டில்;  வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமின்றி சிறுவர்களின் ஆக்கத்திறன் செயற்பாடுகள், அறிவு சார்ந்த விளையாட்டுக்கள், சித்திரம், கவிதை, கட்டுரைப் போட்டிகள், சிறுவர்களின் பேச்சுத்திறன், முன்வரும் தன்மை, தமது திறன்களை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் போன்ற முற்றுமுழுதாக கல்வி கற்கும் சிறுவர்களின் இயல் அளவை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஆரம்ப  நிகழ்வில் சர்வோதய நிறுவனத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன், டபிள்யு.சி.எச். திட்ட உத்தி;யோகத்தர்களான கோ.ரூபகாந், சி.நந்தினி மற்றும் சிறுவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X