2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை கர்ப்பிணியாக்கிய அக்காவின் கணவருக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2014 மே 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியினை 5 மாத கர்ப்பிணியாக்கிய சிறுமியின் அத்தானைத் (அக்காவின் கணவர்) தேடி வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் அக்காவின் கணவராகிய 23 வயது இளைஞன், சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என சிறுமியின் தாயார் வவுனியா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவ்விளைஞரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியும் தாயாரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரியவந்ததையடுத்து சந்தேகநபரான இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X