2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கழிவு பொருட்களிலான கண்காட்சி

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களினால் கழிவு பொருட்களில் உருவாக்கப்பட்ட கண்காட்சி வியாழக்கிழமை (22.5) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் ஆரம்ப பிரிவில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏற்படும் கழிவுகளில் இருந்து ஆக்கப்பொருட்கள் செய்யப்பட்டிருந்தன.

இதன்போது வீட்டு உபகரணப்பொருட்கள், வீட்டுத்தோட்டம், வயல்வெளிகள், விமானங்கள், கணினிகள் அபாய நிலையில் பயன்படுத்தும் பொருட்கள், வீதி ஒழுங்குகள் என பல பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தலைமையில் இடம்பெற்ற இக் கண்காட்சிக்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி அதிகாரி எம். பி. நடராஜா, ஆரம்ப பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X