2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை கலந்துரையாடல்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் தேசிய சமூக ஒருமைப்பாட்டிற்கான கொள்கை வகுப்பிற்கான முன்னோடி கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.எல்.ஏ.கசீம், ஜிஐசற் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் தயானி பானகொட ஆகியோர் வளவாளர்களாகப் பங்கேற்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொருத்தமான தேசிய ஒருமைப்பாட்டு கொள்கை எவ்விதம் வகுக்கப்பட வேண்டுமென இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இக்கலந்துரiயாடலில், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களின் செயலர்களும்; அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நடராசா உமாநாத்தும் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X