2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான 'சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு' செயலமர்வு பாரதிபுரத்திலுள்ள சுகாதார பராமரிப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (23)  இடம்பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் நிதி அனுசரணையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரைச்சி சுகாதார வைத்தியதிகாரி மருத்துவ கலாநிதி எஸ்.தர்சனன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி இராஜரட்ணம் செந்தூரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் 60 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X