2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வற்றாப்பளை அம்மன் ஏற்பாடுகள் மும்முரம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை, கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு,  அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் சு.இரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இம்முறை பொங்கலுக்கும் அதிகளவான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதினால், ஆலயத்திற்கு வரும் உள்ளக வீதிகள் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளும் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X