2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீட்டார் மீது தாக்குதல்: நகைகள் கொள்ளை

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நயினாமடு கிராமத்தில்; சனிக்கிழமை (25) வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டுரிமையாளரை தாக்கவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

'நயினாமடுவில் வசித்து வரும் தம்பிராசா செல்வராசா என்பவரின் (தபால் திணைக்களத்தில் முன்பு பணியாற்றிய) வீட்டிற்கு இரவு வந்தவர்கள் அவரின் பெயரைக்கூறி அழைத்துள்ளனர்.

இதனையடுத்து அவர் வெளியில் வந்து பார்த்தபோது அவரை கூறிய ஆயதத்தில் தாக்கியதுடன் அவரின் மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டரைப்பவுண் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த த.செல்வராசா வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X