2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முதியோர் பராமரிப்பு சேவையாளர் பயிற்சிநெறி

Kanagaraj   / 2014 மே 26 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட முதியோர் பராமரிப்பு உபகார சேவை பயனாளிகளுக்கு, பயிற்சி நெறியை நடத்துமாறு தமக்கு அறிவிக்ப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தமக்கு இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட மட்டத்தில் அனைத்து பயனாளிகளையும் இணைத்து 30 பேர்களைக் கொண்டதாக இந்தப் பயிற்சி நெறியை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பயிற்சி நெறிக்காக 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

10 நாள்களைக் கொண்ட இந்த பயிற்சி நெறிக்கான விரிவுரைகளுக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்களிப்பு செய்வார்களெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி நெறியில் பங்குபற்றுபவர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன், 18 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவராகவும், சிறந்த குணநலன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

சிறந்த உடல் ஆரோக்கியமுடையவராகவும், சுயமாக சமூக சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவையில் ஈடுபடுவதில் விருப்பமுடையவராக இருத்தல் வேண்டுமெனவும் முதியோர் செயலக பணிப்பாளர் தமக்கு அனுப்பியுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிட்டுள்ளதாக மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X