2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

உடையார்கட்டு கமநல சேவை நிலையத்தை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


யுத்தத்தால் சேதமடைந்த முல்லைத்தீவு, உடையார்கட்டு கமநல சேவை நிலையக் கட்டிடமானது  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 11.7 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

மேற்படி கமநல சேவை நிலையம் புனரமைக்கப்படாமையால், தங்களால் முழுமையாக சேவையை  பெறமுடியாதுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கான புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில், புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை,  புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு உரக்களஞ்சிய நிலையமொன்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 3.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X