2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இறைச்சிக்கு வெட்டப்பட்ட சினைப் பசு: பிரதேச சபை பணியாளர் பணிநீக்கம்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள அம்பாள்குளம் பகுதியிலுள்ள கொல்களமொன்றில்; சினைப் பசுமாடொன்றை இறைச்சிக்கு வெட்டியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில்  பிரதேச சபை பணியாளர் ஒருவரை திங்கட்கிழமை (26)  பணிநீக்கம் செய்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை.குகராஜா  தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி இறைச்சியை விற்பனை செய்த 02 மாட்டிறைச்சிக் கடைகளை மூடியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி பிரதேச சபை பணியாளரின் கண்காணிப்பின் கீழ், கொல்களத்தில் சட்டவிரோதமாக சினைப்  பசுமாடொன்று  ஞாயிற்றுக்கிழமை (25) இறைச்சிக்கு வெட்டப்பட்டதுடன்,  இறைச்சி உருத்திரபுரத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில்  விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில்,   குறித்த பணியாளர் மீது விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்ததாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X