2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குருவில்வான் பிரச்சினை: உயர்மட்டத்தின் கவனத்திற்குகொண்டுவர நடவடிக்கை

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிட்;குட்பட்ட குருவில்வான் இசைமாள மோட்டை கிராம மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை  தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் திங்கட்கிழமை (2) உறுதியளித்தார்.

1972 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை வாழ்ந்து வரும் மேற்படி மக்களின் காணிகளை அபகரிக்க வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

மேற்படி கிராம மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திங்கட்கிழமை(2) மாலை குறித்த கிராமத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போதே அக்கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது குறைப்பாடுகளை முறையிட்டுள்ளனர்.
 
'குவில்வான் இசைமாளமோட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் எம்மை உடனடியாக குறித்த கிராமத்தை விட்டு வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் பல்வேறு அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த காலங்களில் இப்பகுதியில் 150 குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தோம்.

இவ் அறிவித்தலினால் 14 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிப்படைந்துள்ளதோடு அச்சமடைந்து உள்ளனர்.

இக்கிராமமானது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலபெருமாள்கட்டு கிராம சேவகர் பரிவில்; கட்டுக்கரை குளத்தின் பின்புரத்தை அண்டிய சகல வழமிக்க கிராமமாக காட்சியளிக்கின்றது.

1972ஆம் ஆண்டு அப்பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வந்தோம். 

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்காரணமாக இக்கிராம பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்தோம். பின் நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் காரணமாக மீண்டும் இங்கு மீள்குடியேறினோம்.

இந்த நிலையிலே எதுவித முன் அறிவித்தலுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இக்கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராக வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராம மக்களை எழுப்புவதற்கு ஏற்கனவே இராணுவம் முயற்சி செய்து வந்தது. இதற்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் பொது மக்களுக்குச் சொந்தமான பல இடங்களில் இராணுவத்திற்குச் சொந்தமான இடம் என இராணுவத்தினரால் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.

தற்போது வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிள் இக்கிராமத்திற்கு வந்து மக்களை வெளியேறுமாறு கூறவதோடு பழமை வாய்ந்த மரங்களை வெட்டும்படி அச்சுருத்துகின்றனர்.

சகல வழங்களையும் கொண்ட இக்கிராமத்தில் சிங்கள குடியேற்றம் ஒன்றை மேற்கொள்ளும் முகமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே இக்கிராமத்தை மீட்டுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வேண்டுகோளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X