2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, ஓமந்தை, அரசன்குளம் பகுதியில் புகையிரத பாதையோரத்திலிருந்து அடிபட்ட காயங்களுடன் ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை (03) மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அடையாளம் காணப்படாத இச்சடலத்துக்குரியவர் சுமார் 60 வயது மதிக்கதக்கவர் எனவும் வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும்  அணிந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

இச்சடலத்தின் தலைப்பகுதியில் அடிபட்ட காயங்களும் உடலில் ஆங்காங்கே சிறு காயங்களும் காணப்படுவதாகவும் இவர், புகையிரதத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பிரதேசத்தில் மாடு மேய்ப்பதற்காகச் சென்றிருந்த பிரதேசவாசி ஒருவர், சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து பளை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பயணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் நடத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X