2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கில், பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழிற்துறையை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, முதலாம் வட்டாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தும்புத் தொழிற்சாலையொன்றை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஊடாக அமைத்து அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன், முதியோர்களுக்கென பிறிதொரு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கைப்பணி மற்றும் கைவினை உற்பத்திகள் ஊடான சுயதொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பில், பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கைத்தொழில் அபிவிருத்தி சபையும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டவர்களை கொண்டு இயங்கும் சங்கத்தினையும் ஒன்றிணைந்து கூட்டுத் தொழிற் முயற்சியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுக்க வழிசமைக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X