2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஒளிபாய்ச்சி மீன்பிடித்தவர்களுக்கு தண்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடிமுறையான ஒளிபாய்ச்சி  மீன்பிடியில் ஈடுபட்ட 18 மீனவர்களில் 8 பேருக்கு தலா 5000 ரூபா தண்டமும், 10 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

அத்துடன், 8 பேருடைய வள்ளங்கள் மற்றும் வலைகளை (சுருக்கு வலைகள்) அரசுடமையாக்கும்படியும், மிகுதி 10 பேரின் வள்ளங்கள் மற்றும் வலைகளை 3 இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் விடுவித்தார்.

நாயாறு பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான ஒளிபாய்ச்சி, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 4 வள்ளங்களில் வந்த 18 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் என இன்று புதன்கிழமை (04) அதிகாலை தகவலறிந்த முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறையினர், கடற்படையினரின் உதவியுடன் கடலுக்குச் சென்று குறித்த மீனவர்களைக் கைது செய்ததுடன், அவர்களின் வள்ளங்கள், வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மேற்படி 18 மீனவர்களையும் இன்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, அவர்களில் 8 பேர் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர் இதனையடுத்து அவர்களை தலா 5000 ரூபா தண்டம் விதித்ததுடன், அவர்களின் வள்ளங்கள் மற்றும் வலைகளை அரசுடமையாக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும், மற்றய 10 மீனவர்களும் தாங்கள் சுற்றவாளிகள் எனத் தெரிவித்ததினையடுத்து அவர்களை தலா 50,000 ரூபா சரீரப் பிணையிலும், அவர்களின் உடமைகளை 3 இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X