2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அங்க சேஷ்டை புரிந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரிலுள்ள வியாபார நிலையமொன்றில் செருப்பு வாங்குவதற்குச் சென்ற சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த சிறுமியொருவர் மீது  அங்க சேஷ்டை செய்த  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவ்வியாபார நிலைய உரிமையாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

இவ்வியாபார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (03) சென்ற  15 வயதான இச்சிறுமிக்கு பொருட்களை காண்பிப்பதாகக் கூறி வியாபார நிலைய உரிமையாளர் உள்ளே  அழைத்துச் சென்று  அங்க சேஷ்டை செய்ததோடு, தகாத முறையிலும் நடக்க  முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் இச்சிறுமி வியாபார  நிலையத்திலிருந்து வெளியேறி  சிறுவர் இல்ல காப்பாளரிடம்  நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து,  மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில்  காப்பாளர் முறைப்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X