2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின்போது காணாமல் போன தங்களது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி,  முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது  வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

'ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை முள்ளியவளை மற்றும் கோப்பாபிலவு பகுதிகளில் இனந்தெரியாதவர்கள் தடுத்தனர்.  அத்துடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாலும் சிலர் ஆர்ப்பாட்டத்தைக் குழப்பும் விதமான கோஷங்களை எழுப்பினர்.   எனினும்,  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு, உறவினர்கள் தங்களது  கோரிக்கைகளை  பலமாக முன்வைத்ததாகவும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X