2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'ஊழலை இல்லாதொழிப்பது' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


ஊழலை இல்லாது ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கு  வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டநெஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கின்போது இலங்கையில் இடம்பெறும் ஊழல்கள், இவை இடம்பெறும் பிரதேசங்கள், அவற்றை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு ஊழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் உட்பட துறைசார் உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர்.

வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ட்ரான்ஸ்பேரன்நி இன்டநெஷனல் நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் ரவீந்திர டி சில்வாவும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X