2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆலயங்கள், தேவாலயங்கள் புனரமைப்புக்கு நன்கொடை

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிப்படைந்த ஆலயங்கள் மற்றும் தேவாலங்களை மீளவும் புனரமைப்புச் செய்வதற்கு நிதி வழங்குதல் தொடர்பிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் ஈ.ஏ.சமரசிங்க கலந்துகொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த 11 இந்து ஆலயங்களையும், 5 கிறிஸ்தவ ஆலயங்களையும் புனரமைப்பதற்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி புனர்வாழ்வு அதிகார சபையினால் நன்கொடையாக வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மேற்குறித்த ஆலயங்களில் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X