2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காணாமற்போனோர் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோரான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான வழக்கினை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ம.ஆனந்தராஜா, ஜுலை மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களான கிருஷ;ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, அனந்தி சசிதரன், கந்தசாமி பொன்னம்மா ஆகியோரினால் 2009ஆம் ஆண்டில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்த குறித்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேற்படி வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி, மன்றிற்கு சமூகமளிக்கவில்லை.  இதனால் குறித்த வழக்கினை ஜுலை 21 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னர் நியமிக்கப்பட்ட அரச சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகச் சென்றமையினால் குறித்த வழக்கு இழுபறி நிலையில் இருந்து வந்தது.

தொடர்ந்து பிறிதொரு அரச சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி வழக்கு இடம்பெற்றது.

இருந்தும் இன்று (05) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வருகை தரவில்லை. இதனால் இந்த வழக்கு இழுபறி நிலையில் இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X