2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததானம் செய்வோர் தன்னலம் தேடாத மனிதர்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இரத்ததானம் செய்வோர் தன்னலம் தேடாத மனிதர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இரத்ததானம் வழங்குவோரை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா தாதியர் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பல உயிர்களை காப்பாற்றுபவர்களில் இவர்களின் பங்கும் மறைமுகமாக உள்ளது. அத்தோடு, இவர்களின் இந்த உயர்ந்த உள்ளத்தால் இவர்கள் தன்னிலை பெற்று விளங்குகிறார்கள். உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் இனத்தால் பிரிந்திருந்தாலும், இரத்தத்;தால் ஒன்றிணைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.

இவ்வாறான கொடையாளர்களை சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக கௌரவிக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் இரத்தம் வைத்தியசாலைகளில் இல்லாத நிலைகளில் பிறர் உயிர் காக்க முன்வந்த இரத்தக் கொடையாளர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இனிவரும் சந்ததியினரும் இரத்தக் கொடையாளர்களாக உருவாக வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வின்போது இரத்ததானத்தை வலியுறுத்தும் வாகன பவனி வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகி தாதியர் கல்லூரிவரை சென்றது.   இரத்தக்கொடையாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X