2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மீள்குடியேற்ற கிராமத்தில் இடம்பெற்ற கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  பெண்ணொருவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் மா.கணேஷராஜா நேற்று  வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மேற்படி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததுடன்,  இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  இளைஞர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த  இளைஞரின்; தாய் நேற்று வியாழக்கிழமை முள்ளியவளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்டவர் மதுபோதையில் தனது வீட்டிலிருந்து கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.  இந்தச் சண்டையை பார்க்க வந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன்  மதுபோதையிலிருந்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கினார்.

இதனையடுத்து தன்னை தாக்கியமை பற்றி குறித்த பெண் தனது மகனிடம்  கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மகன் தனது தாயை அடித்துக் காயப்படுத்திய அந்த நபரின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை  கத்தியால் குத்திய நிலையில் அவர் மரணமடைந்தார்.

இதனைத் தடுக்கவந்த  22 வயது இளைஞர் ஒருவரையும் அவர் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் தாய் கைதுசெய்யப்பட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X