2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா விபத்துக்களில் மூவர் காயம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரில் நேற்று (5) இடம்பெற்ற மூன்று வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மூன்றுமுறிப்புப் பகுதியில் நேற்று காலை (05) 10.30 மணியளவில் பேரூந்தும் கப்ரக வாகனமும் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் கப்ரக வாகனத்தில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா - கண்டி வீதியில் உள்ள பௌத்த விகாரைக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X