2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்கள் ஐவர் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதாரத்  தொழிலாளர்கள் 05 பேர் இன்று திங்கட்கிழமை (09) நகரசபையின் முன்றலில்  உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடந்த 2001ஆம்;   2009ஆம் ஆண்டுகளில்; வவுனியா நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்தபோது,  தற்காலிக நியமனங்களில் பணியாற்றியவர்களின் பணிக்காலம் நிறைவடைந்துள்ளதாக நகரசபை செயலாளாரினால் கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு  நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி  உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, தங்களுக்கு முதலமைச்சர் நிரந்த நியமனம் வழங்குவதாக 2014ஆம் ஆண்டு; முற்பகுதியில் வவுனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் அளித்த  வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளனர்.

''குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர்களுக்கு ஏழையின் பசி தெரியுமா', 'நிரந்தர நியமனம் வழங்கு' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்த  இவர்கள், வாய்களை துணியால் கட்டியவாறு உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபை உப தலைவர் எஸ்.சந்திரகுலசிங்கம், நகரசபைச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர்  சென்று பார்வையிட்டனர்.

இந்த  உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.சித்திரன் கருத்துத் தெரிவிக்கையில,

'தொழிலாளர் பற்றாக்குறையாக இருந்த   காலத்தில் நகரசபை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்திருந்தது. இவர்கள் பல வருடங்களாக நகரசபையில் பணியாற்றியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 07 தொழிலாளர்களுக்கு கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் அவர்களது ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளதாக நகரசபை செயலாளாரினால் கடிதம் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக 07 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் நிரந்தர நியமனம் வழங்குவதாக பொதுக்கூட்டமொன்றில் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த  வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

நிரந்தர நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த இந்தத் தொழிலாளாகள் வேலையை இழந்துள்ளமையால் தற்போது பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் இருவர் பொருளாதாரச் சுமை காரணமாக வவுனியாவை விட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் 05 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதப்;  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த உண்ணாவிரதப்  போராட்டத்திற்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில், அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X