2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு அபராதம்

Kanagaraj   / 2014 ஜூன் 09 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்குத் தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களின் சாரதி அனுமதிப்பத்தினை 2 வாரங்களுத் தடை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா திங்கட்கிழமை(09) பிறப்பித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு 4000 ரூபாவும், காப்புறுதிப்பத்திரம் மற்றும் வரிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு ரூபா 6000 ரூபாவும், காப்புறுதிப்பத்திரம் மற்றும் வரிப்பத்திரம் இன்றியும், மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 12000 ரூபாவும் தண்டம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

இவர்கள் கடந்த வாரம் புதுக்குடியிருப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X