2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

செட்டிகுளம் பிரதேச சபையின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 10 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) பிரதேச சபை வளாகத்தில் பிரதேச சபையின் தலைவர் க. அந்தோனி ஐயா தலைமையில் இடம்பெற்றது.

இறுதி யுத்த காலத்தில் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டபோது அம்முகாமில் பிரதேச சபையின் சார்பில் தற்காலிகமாக பணியாற்றியவர்களில் 16 பேருக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், முத்தலிபாபா பாரூக் ஆகியோரும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இந்திரராஜா, எம்.தியாகராசா, எஸ்.ஜெயதிலக, தர்மபால செனவிரட்ன மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X